man passed away while sleeping in Madurai

Advertisment

மதுரை – வீரபாண்டிய நகர் – கருப்பாயூரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் சமயமுத்து(வயது 33),தன் மனைவியின் ஊரான திருச்சுழி வட்டம்– நெடுகனேந்தல் கிராமத்துக்கு, மாமனார் கருப்பையா கட்டிய புது வீடு பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு சென்றார். அன்றைய தினம் அங்கு தங்கிய சமயமுத்து, மறுநாள் நடந்த கறி விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டிருக்கிறார்.

அன்றிரவுமது போதையில் படுத்து உறங்கியவருக்கு, அதிகாலை 1-50 மணிக்கெல்லாம் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுபரிசோதித்த பிறகு,ஆம்புலன்ஸ் மூலம் சமயமுத்துவை மதுரை அரசுராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப்பரிசோதித்த மருத்துவர், சமயமுத்து இறந்துவிட்டதை உறுதி செய்திருக்கிறார்.சமயமுத்து இறப்பு குறித்து தந்தை தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் திருச்சுழி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.