திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். கடந்த 3 மாதங்களுக்கு முன் நண்பர்களுக்குள் ஏற்பட்ட கஞ்சா தகராறில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், அந்த 10 பேரில் ஒருவரான கிசாந்த் (23) இயற்கை உபாதைக்காக விடியற்காலை ராமகிருஷ்ண மேம்பாலம் கீழே உள்ள மாநகராட்சி கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த 4 பேர், கிசாந்தை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.