Advertisment

தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் அடித்து கொலை! 

Man passed away in trichy madurai highway

திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் பாஸ்கர் (வயது 28). இவர், திருச்சி விராலிமலை அருகே உள்ள எம்.எம்.போர்ஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை பணிக்கு சென்றவர், இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அவர் பிணமாக கிடந்துள்ளார்.

Advertisment

தகவல் அறிந்த கே.கே நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர்களின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது தேசிய நெடுஞ்சாலையில் சற்று தூரம் சென்று திரும்பியது. இந்தக் கொலை காதல் விவகாரமா அல்லது முன் விரோதம்போன்ற வேறுகாரணமாக நடந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe