Advertisment

தூங்கச் சென்ற இளைஞர் தூக்கில் தொங்கிய சோகம்

man passed away erode

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஜரத்தல் அடுத்த மேற்குதெருவை சேர்ந்தவர் கணேசன் (55). கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து மகன் தினேஷ்குமார் (24) உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தினேஷ் குமார் வீட்டுக்கு வந்து அவரது அறையில் தூங்கச் சென்றார். கணேசன் அருகிலுள்ள தனது அம்மா வீட்டில் தூங்கச் சென்றார்.

Advertisment

நேற்று காலை எழுந்த கணேசன் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டுக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை தொடர்ந்துகதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் தினேஷ் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment

இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode police Youth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe