/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_149.jpg)
ஈரோட்டில் மதுவுக்கு அடிமையானவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு எஸ்.கே.சி.ரோடு கோவிந்தராஜன் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் சந்துரு (36). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் சந்துரு மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி மனவிரக்தியில் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்த சந்துரு திடீரென விஷம் குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் சாந்தி சந்துருவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர், உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்துரு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)