மதுபான கடை அருகே சாக்கடையில் வாலிபர் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கும் ஆளானார்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று இரவு மது அருந்திவிட்டு அருகில் உள்ள சாக்கடை அருகே ஒரு திட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதன் கழிவுநீர் சாக்கடைக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லோகநாதன் பிணமாகக் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.