Advertisment

“நானும் வருகிறேன்...” - நண்பன் இறந்த துக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

man lost their life  for friend

Advertisment

ராணிபேட்டையில் நண்பன் இறந்த துக்கத்தில் தூக்கில் தொங்கிய இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் சோமசுந்தரம்நகரைச்சேர்ந்த ராஜன் மகன் விஷால்(19). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் விஷாலுக்கு கடந்த சில வருடங்களாக உடல்நல பாதிப்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த 28 ஆம் தேதிதனது உடல்நலம் பாதிப்படைந்ததால் விரக்தியடைந்த விஷால் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தனது நண்பன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த அஜித், விஷால் தூக்கில் தொங்கிய கயிரை தனது கையில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் கடந்த 30 ஆம் தேதி மது, இனிப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு விஷால் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற அஜித், வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வைத்துப் படையலிட்டுள்ளார். பின்னர் அங்கேயே உட்கார்ந்து அழுதுள்ளார். அதனை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து அஜித்திற்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தான் தனது வீட்டிற்கு வந்த அஜித் அதிகாலை 3 மணியளவில் விஷால் தூக்கு மாட்டிக்கொண்ட அதே கயிரை வைத்து அஜித்தும் தூக்கு மாட்டித்தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு சில நிமிடங்கள் முன்பு தனது செல்போனில் நண்பன் விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வாட்சாப்பில்ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு அதில் ‘நானும் வருகிறேன்...’ என்று குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து நண்பன் விஷால் உடல் புதைக்கப்பட இடத்திற்கு பக்கத்தில் அஜித்தின் உடலும் புதைக்கப்பட்டது.

Friend police ranipet
இதையும் படியுங்கள்
Subscribe