Advertisment

காதல் திருமணம்; குடிப்பழக்கத்தால் அரங்கேறிய சோகம்

man lost their life due to family dispute

ஈரோடு கருங்கல்பாளையம், வண்டியூரான் கோவில், கலைஞர் நகரைச்சேர்ந்தவர் வடிவேல்(40). இவரது மனைவி கலையரசி(39). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வடிவேலும், கலையரசியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். வடிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே குடும்பச் சண்டை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வடிவேலுதனது மனைவி கலையரசியை அரிசி அளக்கும் படியால் அடித்துவிட்டார். இதனால் அவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

Advertisment

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த வடிவேலுதூக்குப் போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே வடிவேல் இறந்து விட்டதாகத்தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

police liquor Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe