ADVERTISEMENT

7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

03:34 PM Mar 29, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தை சேர்ந்த சண்முகம் (44) என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுவனை, அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போக்சோவில் கைது செய்யப்பட்ட சண்முகவேலுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார். அதில் சிறுவனை கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறையும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 20 ஆண்டு சிறையும், ஆக மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT