/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hkl_3.jpg)
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை உயிருடன் எரித்துகொன்ற இளைஞருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதான்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் கடந்த 2021ம் ஆண்டு குடிக்க பணம் தராத காரணத்தால் தன்னுடைய அம்மாவை உயிருடன் எரித்துக் கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி அப்துல் காதர், கொலைக்குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு 40 ஆண்டுகால சிறை தண்டனை விதித்தார். அபராதமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும்அவர் உத்தரவு பிறப்பித்தார். குடி போதைக்காக பெற்றஅம்மாவையேகொலை செய்தவருக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)