கடலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் பகுதியைச்சேர்ந்தவன் தேசிங்கு. கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டான். கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேசிங்குவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி தேசிங்கு தரப்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.