Advertisment

கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தங்க செயின் திருட்டில் கைது!

Man involved in cases arrested for gold chain

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிந்தசாமி நகரில் வசிப்பவர் பட்டுசாமி. இவரது மனைவி சுலாபா. இவர் கடந்த 26ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு மகா சிவராத்திரிக்காகச் சிதம்பரம் கோவிலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது 6 சவரன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

இந்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் 20 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சிதம்பர நகரக் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் உள்ள தில்லை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் (வயது 40) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இவரிடம் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 6 சவரன் தங்கச் சங்கிலியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisment
arrested police chidamparam Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe