விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (30).இவர் கடந்த 3ம் தேதி இரவு 7 மணி அளவில் சுடுகாடு அருகே மலம் கழிப்பதற்காக சென்றுகொண்டிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த செல் போன், பணம் ரூ. 1000 பிடுங்கிக்கொண்டு கண்ணில் குத்தி பல இடங்களில் காயத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/man in_0.jpg)
மறுநாள் காலை நிலத்துக்கு சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் வாட்ஸப்பில் மாவட்ட கண்காணிப்பாளர் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவைக்கப்பட்டது.
தகவலின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சம்பவ இடத்தை பார்த்து விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.
Follow Us