man found passed away mysteriously near Katpadi

Advertisment

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த எம்.எஸ்.கண்டிகை பகுதியில் இன்று மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்தது. இதுக்குறித்து அப்பகுதி பொதுமக்கள் பொன்னை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் காவல் ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ரெண்டடி அடுத்த மாங்காமரத்து மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிசிவம் (29) என்பது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் குறித்து ஹரிசிவம் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த ஹரிசிவம் மனைவி கௌசல்யா மற்றும் உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். சடலத்தில் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது உள்ளதாகவும் உடல் முழுவதும் மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் இருப்பதாகவும் கூறி கௌசல்யா மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்,. தன் கணவரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் கௌசல்யா மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கௌசல்யாவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பொன்னை போலீசார் இறந்த ஹரிசிவன் உடலை போலீசார் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்ககூர்வு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.