Man beaten to death for overhearing ganja sale - Horror in Thiruthani

திருத்தணியில் காங்கிரஸ் பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். காங்கிரஸ் பிரமுகரான ராஜேந்திரன் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் அருகே சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதை அறிந்து தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல அவரது வீட்டுக்கு அருகே இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் மர்ம நபர்கள் திருட முயன்றபோது அதையும் தட்டிக்கேட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் நெசவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஜேந்திரனை நேற்று இரவு உள்ளே புகுந்து மர்ம நபர்கள் சிலர் தலையில் கற்களை போட்டு அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.