Advertisment

தங்கக் காசு தருவதாகக் கூறி மோசடி செய்ய முயன்றவர் கைது!

Man arrested for trying to swindle gold

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரை ஒட்டி உள்ளது அஜித் நகர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இந்த நகரில் வசிப்பவர் 38 வயதான ஸ்ரீநாத். கடந்த நவம்பர் 12- ஆம் தேதி அன்று இரவு 09.00 மணியளவில் இவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். அவர்கள் ஸ்ரீநாத்திடம் தங்களிடம் பழங்காலத்து தங்க காசுகள் உள்ளன. இவை மிகவும் விலைமதிப்பு மிக்கவை. கணிசமான ஒரு தொகை கொடுத்தால், அந்த தங்க காசுகளை அவரிடம் தருவதாகக் கூறி பேரம் பேசினர்.

Advertisment

இதில் சந்தேகம் அடைந்த ஸ்ரீநாத் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை அழைத்ததும், அவர்கள் தங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றபோது, அவர்களில் ஒருவரை அப்பகுதி மக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். பிரிக்கப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் 27 வயதான குபேந்திரன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியது அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் என்பதும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.

Advertisment

kallakurichi Police investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe