Skip to main content

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது! 

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Man arrested theft case

 

திருச்சி - மதுரை ரோடு ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (50). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், ஜீவா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3000 ரூபாய் பணத்தை ஜீவா நகரைச் சேர்ந்த துரைராஜ்(22) என்பவர் பறித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். துரைராஜ் மீது கோட்டை காவல்நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்