Man arrested for stealing jewelry from home

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்ராயனப்பள்ளி, வளத்தூர், பசுமத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த சில வாரம் முன்பு காடை மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். காடை மோகன் தலைக்கு வீக் அணிந்து கொண்டு திருடச் செல்வதால் போலீஸாரால் குற்றவாளியைக் கண்டுபிடிக்கச் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காடை மோகனின் கூட்டாளியான டான்ஸ் மாஸ்டர் சிவா என்கிற சிவானந்தம் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நடந்துவந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயன்றுள்ளார். அதனையறிந்த போலீசார் தப்பியோடிய நபரை விரட்டி பிடித்தனர். பின்பு விசாரணை செய்ததில் அவர் காடை மோகன் கூட்டாளி டான்ஸ் மாஸ்டர் சிவானந்தம் என்பது தெரியவந்தது.

Man arrested for stealing jewelry from home

Advertisment

பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 770 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 11 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் காடை மோகன் கொள்ளையடித்த பொருட்களை சிவானந்தத்திடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் குற்ற வழக்குகளில் ஏற்கனவே சிறைச் சென்றது தெரியவந்த நிலையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.