hjk

Advertisment

திருமணங்களில் கேமராக்களை குறிவைத்து திருடிய முதியவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரை காவல்துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேவந்திரன் அவர் வசிக்கும் பகுதியை சுற்றிலும் எந்த திருமணம் நடைபெற்றாலும் அங்கு சென்று திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களிடம் இருந்து நூதன முறையில் கேமராக்களை திருடி வந்துள்ளார். சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராக்கள் மற்றும் 6 சவரன் திருட்டு நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த திருட்டு தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.