Advertisment

குடிபோதையில் தகராறு; நண்பனையே கொலை செய்த நபர் கைது

nn

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம்சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிதம்பரம் அருகே மேலகுண்டலபாடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சிலம்பரசன் (25). இவரது அம்மா அப்பா வெளியூருக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் 5-ந்தேதி காலை 10 மணிவரை எழுந்திருக்கவில்லை. பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டைத் திறந்து பார்த்தபோது படுக்கையில் கழுத்து மற்றும் உடம்பில் கத்தியால் குத்தப்பட்டு இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார்.

Advertisment

இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையின் உடலைக் கைப்பற்றிச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த விசாரணையில் வல்லம்படுகை மெயின்ரோட்டை சேர்ந்த குமார் என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன்( 18) என்பவரும் சிலம்பரசனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் மது அருந்தியபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சிலம்பரசன், தமிழ்செல்வன் தாயை தவறாகப் பேசியதாகவும் அதனால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இவர்மீது அண்ணாமலை நகர் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். குடிபோதையில் நண்பர்களுக்குள் சண்டை ஏற்பட்டு கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident police TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe