தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது...

Man arrested for serial theft ...

விழுப்புரம் மாவட்டம் காணை காவல் நிலைய போலீசார் நேற்று கருங்காலிப்பட்டு செல்லும் சாலையில் வாகன சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக நடமாடிய ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் புதுச்சேரி மாநிலத்தை தனத்து மேடு பகுதி ஜெய்கணேஷ் நகரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜி வயது 24 என்பது தெரியவந்தது.

இவர் கருங்காலிப்பட்டு பகுதியில் கடந்த மார்ச் மாதம் பக்தவச்சலு என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திருடியதும் அதேபோல் கூட்டேரிப்பட்டு பகுதியில் பைக் திருட்டு ஆரோவில் பகுதியில் வழிப்பறி கொள்ளை என தொடந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து விஜியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 8 சவரன் திருட்டு நகையை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அவர் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். போலீஸார் தொடர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் கைது செய்யப்பட்டுள்ளது சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe