Published on 27/01/2022 | Edited on 27/01/2022

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள புதுசீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்த திவாகர் (25) என்ற இளைஞரை கரூர் நகரக் காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்து, அவரிடம் இருந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
அவர் தொடர் குற்றச்செயலில் ஈடுபடக்கூடியவர் என்று தெரிந்ததால், அவரைக் குண்டர்
சட்டத்தில் கைது செய்ய கரூர் நகர போலீசார் மாவட்ட கலெக்டருக்குப் பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து கஞ்சா வியாபாரி திவாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திவாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.