Advertisment

கஞ்சா விற்ற நபர் கைது! 

Man arrested for selling cannabis

திருச்சி ராம்ஜிநகர் பெரிய தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எடமலைப்பட்டிபுதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்று நோட்டம்விட்ட போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த அய்யப்பன்(43) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 11 ஆயிரம் இருக்கும். இது குறித்து எடமலைப்பட்டி புதுார் போலீசார் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவைச் சேர்ந்த விக்கி என்கிற டானியேல் விக்கி(22) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். இவர் மீது பாலக்கரை மற்றும் கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Cannabis police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe