Advertisment

அரியவகை மரநாயை வேட்டையாடிய நபர் கைது  

Man arrested for poaching rare wild dog

செங்கல்பட்டில் அரியவகை மரநாயை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில்அரிய வகை உயிரினமான ஆசிய மரநாயை கூண்டு வைத்து பிடித்த நபரைபோலீசார் கைது செய்துள்ளனர். வனப்பகுதியில் வன காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞர் கூண்டில் ஒரு அரிய வகை உயிரினத்துடன் பிடிபட்டார். அவரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில், அவர் கையில் வைத்திருந்தது அரியவகை உயிரினமான ஆசிய மரநாய் என்பது தெரியவந்தது. மேலும் தான் வேட்டையாட வந்ததையும் இளைஞர் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து மரநாயை மீட்ட வனத்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisment

Chengalpattu forest incident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe