Advertisment

தம்பி மனைவியை குழந்தையுடன் கொன்று எரித்த அண்ணன்! 

Man arrested near dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே இருக்கும் மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. சிவக்குமாருக்கு அஞ்சலை(21) என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டரை வயதில் மலர்விழி என்ற பெண் குழந்தை உள்ளது. அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், நேற்று(சனிக்கிழமை) சிவகுமார் புளியம்பழம் வியாபாரம் செய்வதற்காக வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மாலை அஞ்சலை, அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற கருப்பையா அஞ்சலையிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்திருக்கிறார். அப்போது அஞ்சலை பயந்து சத்தம் போட்டுள்ளார்.

Advertisment

இதில் பதட்டம் அடைந்த கருப்பையா, அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்தவிட்டு, அவரின் இரண்டரை வயது பெண் குழந்தையையும் கொலை செய்து தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தோட்டத்து பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட போலீஸார் விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தம்பியின் மனைவி மற்றும் குழந்தையை அண்ணனே கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe