Man arrested for misbehaved

திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த வீராசாமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு தன்னுடைய லோடு வேன் ஆர்சி புக்கை அடமானம் வைத்து 1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கடனாகப் பெற்றுள்ளார். ஆனால் அந்தப் பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. பலமுறை வீராசாமி கேட்டும் பணத்தைத் திருப்பித் தராததால், பணத்தைத் திருப்பிப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அவர் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

Advertisment

ஆனால் அங்கு தனது மனைவி,இரண்டு மகன்களுடன் வந்த பிரபு, வீராசாமியை தாக்கியுள்ளார். தடுக்க வந்த வீராசாமியின் மனைவி கோகிலாவின் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதனால் இருவரும் காயமுற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பிரபு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, பிரபு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment