Advertisment

தொடர் பாலியல் வன்கொடுமை; சித்தப்பாவால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

man arrested for misbehaving with a 13-year-old girl

சிதம்பரம் அருகே கடற்கரையோர கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு, அவரது 35 வயது சித்தப்பா இரவு நேரத்தில் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சித்தாப்பாவின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகத் தனது 14 வயது அண்ணனிடம் நடந்த சம்பவம் குறித்துக் கூறியிருக்கிறார்.

Advertisment

சிறுமியின் அண்ணன் நடந்த சம்பவத்தைச் சென்னையில் உள்ள தனது உறவுக்கார பெண்ணிடம் கூற, உடனே அவர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணையில் நடத்தியதில் சிறுமியை சித்தப்பாவே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் துறையினர் சித்தப்பா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த தந்தை ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தந்தை வழி உறவுக்கார பெண்கள் 3 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chidambaram POCSO
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe