Advertisment

மதுபோதையில் நண்பரை குத்திக்கொன்ற வாலிபர் கைது

Man arrested for misbehaved with friend while intoxicated

நாமக்கல் அருகே, மது போதை தலைக்கேறிய நிலையில், நெருங்கிய நண்பரைக் கத்தியால் சரமாரியாகக்குத்திக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள பருத்திப்பள்ளியைச் சேர்ந்தவர் உமாசங்கர் (27). இவருடைய மனைவி சிவாம்பிகா. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (23). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

உமாசங்கரும், சுரேஷூம் சிறு வயது முதலே நெருக்கமான நண்பர்கள். இந்நிலையில், ஜன. 18ம் தேதி தைப்பூசப் பண்டிகைஇரவு, அப்பகுதியில் உள்ள முருகன் கோயிலில் உமாசங்கர், சுரேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்கள் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். ஒருவரை ஒருவர் கேலி பேசிக்கொண்டும், ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டும் இருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தான் கையில் வைத்திருந்த கத்தியால் உமாசங்கரை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உறவினர்கள் உமாசங்கரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உமாசங்கரின் மனைவி சிவாம்பிகா, எலச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுரேஷைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police friends namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe