Advertisment

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; காவல்துறைக்கு தொடர்பா?

man arrested at a massage center in Trichy

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தைச்சுற்றி 7 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. நேற்று அதில் ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு இளம்பெண்ணை வைத்து அங்கு பாலியல்தொழில் நடப்பது தெரிய வந்தது.

Advertisment

இதைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணை மீட்ட போலீசார், பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இளம்பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் இது தொடர்பாக சூர்யா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடைபெற்றாலும் இங்குள்ள உள்ள ஸ்பாக்களில் பணியாற்றக்கூடிய பெண்களுக்கும் காவல்துறையினருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

ஒவ்வொரு மாதமும் வழக்குகளுக்கான டார்கெட் வைக்கப்படும்போது இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு பெயரளவில் வழக்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இங்குள்ள அனைத்து ஸ்பாக்களுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியை அப்பகுதியினர் எழுப்பி வருகின்றனர்.

arrested police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe