மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரத்தை சேர்ந்தவர் துருவன்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த சிவப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சிவப்பிரியாவுக்கு ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த ராமுலு என்பவருடன் திருமணம் முடிந்து ஏழு வயதில் பெண் குழந்தையும், ஐந்து வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிவப்பிரியா ஆந்திராவிற்கு அடிக்கடி சென்று முதல் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து வந்ததால் துருவனுடன்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு சென்ற சிவப்பிரியா இரு குழந்தைகளையும் கையோடுஅழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மது அருந்திவிட்டு தலைக்கேறிய போதையில் வீட்டுக்கு வந்த துருவன்மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிவப்பிரியா அறைக்கு சென்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது அதிகாலையில் துருவன்அவரது தாயார் விஜயம் சேர்ந்து முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பின்னர் நண்பர் லோகேஷைவீட்டுக்கு அழைத்து தன் குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடகமாடி உள்ளார். ஆரம்பம் முதலே துருவனின்நடவடிக்கை மீது சந்தேகம் கொண்டிருந்த போலீசார் அவரிடம் நடத்திய புலன் விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின் துருவன்அவரது தாயார் விஜயா கொலைக்கு உதவியதாக அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.