
திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, துவாக்குடி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற 24 வயது வாலிபர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சிறுமியைக் கடத்திச் சென்றதாக அரவிந்த் மீது திருவறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று (05.10.2021) அரவிந்தை பிடித்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதை உறுதி செய்ததையடுத்து, ரமேஷ் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
Follow Us