திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள எழில் நகர் பகுதியில் வசித்து வரும் சதீஷ் என்பவர் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அந்த வீடியோக்களை பெண்களிடம் காட்டி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இச்சம்பவம் அறிந்து சதீஷின் இரண்டு மனைவிகளும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். சதீஷின் மனைவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவெறும்பூர் காவல்துறையினர் அவரை கைது செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.