Advertisment

மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயன்றவர் கைது! 

Man arrested   grandmother case

Advertisment

திருச்சி திருவானைக்காவல் தெற்கு உத்திர வீதி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (65). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டார். மகள் திருமணம் முடித்து மதுரையில் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் அதே பகுதியில் பக்கத்து தெருவில் குடியிருந்து வந்துள்ளார். சாந்திக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் உள்ளதால் அவரால் எழுந்து நடக்க முடியாது. இதன் காரணமாக அவர் தனது வீட்டை திறந்து வைத்தே படுத்திருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் நேற்று மதியம் குடிபோதையில் அவரது வீட்டில் நுழைந்து கதவை தாழ்ப்பாள் இட்டு அவரைத் வன்கொடுமை செய்ய முயற்சித்து உள்ளார். அப்போது அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து கதவை திறந்தபோது ராஜா தப்பித்து சென்றுள்ளார். உடனடியாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட அவர் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe