Man arrested for cutting sandalwood in park

Advertisment

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் பலதரப்பட்ட மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் நடப்பட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டுவதாக திருச்சி ஷெசனஸ் நீதிமன்ற காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். காவலர்கள் வருவதைக் கண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

காவலர்கள், அவரை விரட்டிச் சென்று, பீமா நகர் அருகே மடக்கிப் பிடித்தனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பட்டுக்கோட்டை, சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அறுக்கப்பட்ட சந்தனமரம் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.