Advertisment

போலி பாஸ்போர்ட் மூலம் தமிழகம் வந்தவர் கைது!

Man arrested for coming to Tamil Nadu with fake passport

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நைனார் முகமது (வயது 36) என்பவர். இவர் மலேசியாவில் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று நைனார் முகமது மலேசியாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்தார்.

Advertisment

விமான நிலையத்தில் அவரின் பாஸ்போர்டை குடியேற்ற பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் தன் தந்தையின் பெயர் மற்றும் வீட்டின் முகவரியை மாற்றி பாஸ்போர்ட் எடுத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவரை திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

fake passport trichy airport trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe