Advertisment

சூதாட்டம் நடத்தி ஆட்டோ ஓட்டுநரிடம் பணத்தை ஏமாற்றியவர் கைது!

Man arrested for cheating money from auto driver by gambling

Advertisment

வேலூர் அடுத்த சின்ன அல்லாபுரம், பனந்தோப்பு பகுதியில் காட்டன் சூதாட்டம் அதிகளவு நடைபெறுவதாகவும். இந்த சூதாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு பணத்தை இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இந்த காட்டன் சூதாட்டத்தை அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், பணம் கட்டினால் ஒன்றுக்கு நூறு மடங்காக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், காட்டம் சூதாட்டம் நடத்தும் சேட்டு என்பவர் தினமும் பணம் பெற்றுக்கொண்டு மறுநாள் உனக்கு பரிசு விழவில்லை. தினமும் பணம் கட்டினால்தான் பரிசு விழும் என்றுபணத்தை ஏமாற்றி வருகிறா என்று ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேட்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

arrested Gambling police
இதையும் படியுங்கள்
Subscribe