திருச்சி பிச்சாண்டார் கோயில் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரின் மகனுக்கும், கவிமலர்என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.கவிமலர், கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் தனலட்சுமி வீட்டுக்கு வந்த கவிமலர், நகை பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில் குளித்தலை நீதிமன்றத்தில்பணிபுரிவதாகமுகமது இஸ்மாயில் (37) என்பவர் அறிமுகமாகி, அவர் குடும்பபிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி தனலட்சுமியிடம் இருந்து 30 பவுன் நகை, 5 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்று உள்ளார்.ஆனால் அவர் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்காததால் கொடுத்த நகை மற்றும் பணத்தை தனலெட்சுமி திரும்ப கேட்டார். ஆனால், அவர் இழுத்தடித்துள்ளார். இதனால் தான்மோசடி செய்யப்பட்டதைஉணர்ந்த தனலட்சுமி இது குறித்து கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமதுஇஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.