கோப்புப்படம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வீட்டிலேயே வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வீரச்சங்கிலி கிராமத்தில் வசித்து வந்த ஜீவானந்தம் என்பவர் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்த 20 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார், ஜீவானந்தத்தை கைது செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.