Advertisment

வேலை கேட்டு அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு!

Man arrested for breaking government bus window asking for job

பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திப்ப சமுத்திரத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு உள்ளூர் பேருந்து மீது கருகம்பத்தூர் அருகே கல் எரிந்து கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே பேருந்து ஓட்டுநர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தந்துள்ளார்.

Advertisment

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த 45 வயதான கார்த்திகேயன் என்பவரை பிடித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

Advertisment

விசாரணையில், தற்போது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தனக்கு ஓட்டுநர் பணி வழங்க வேண்டும் என கார்த்திகேயன் வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையை அணுகியதாகவும், அதிகாரிகள் பின்னர் வரும்படி திருப்பி அனுப்பியதால் வெளியே வந்து ஆத்திரத்தில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்ததாக கூறியுள்ளார். அவர் மீது பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe