
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பேரூர். இந்த ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் வீட்டில் உள்ள இவருக்கு கடந்த வாரம் தான் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் அதே தெருவில் மற்றொரு வீட்டில் நேற்று நடைபெற்ற விழாவுக்காக சத்தமாக ஒலிபெருக்கி வைத்து பாட்டு போட்டு உள்ளனர். இந்த சப்தத்தை பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியை சேர்ந்த கண்ணுசாமி என்பவரது மகன் புஷ்பராஜ்(26) அந்த சிறுமியின் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
தனியாக வீட்டில் இருந்த அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் சிறுமி கத்தி கதறி சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவரது கதறல் குரல் அருகில் ஒலிபெருக்கி மூலம் வெளிப்பட்ட அதிக சத்தத்தினால் சிறுமியின் குரல் அங்கு நடமாடிய யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் சிறுமியை வன்கொடுமை செய்த புஷ்பராஜ் தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் தாயார் சோழதரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, மூவேந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை வன்கொடுமை புஷ்பராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் விழுப்புரம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியை வன்கொடுமை புஷ்பராஜிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சத்தத்தை பயன்படுத்திக்கொண்டு சிறுமியை வன்கொடுமை காமமுகன் புஷ்பராஜன் செயல் அந்தக் கிராம மக்களிடம்பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.