தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விற்பனையின் மொத்த வியாபாரிகளுள் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சத்ராரம். இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே குட்கா தொடர்பாக பல வழக்குகள் காஞ்சிபுரம், திருவள்ளுவர், சென்னை மாநகரத்தில் உள்ளன.

Advertisment

man arrested

இவரை குட்காவழக்கில் கைது செய்ய காஞ்சிபுரம் காவல்துறை தேடிவந்தது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த சத்தராம் அக்டோபர் 20 ந்தேதி மதியம் சென்னையிலிருந்து சொகுசு பேருந்து மூலம் பெங்களூர் சென்றுக்கொண்டிருப்பதை செல்போன் ட்ராக் செய்யும் போது கண்டுபிடித்தனர். உடனடியாக வேலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் அனுப்பினர். அங்கிருந்து ஒரு டீம் புறப்பட்டு வந்தது. ஆம்பூரை அந்த பேருந்து நெருங்க ஆம்பூர் போலீசார் பேருந்தை மடக்கி ஆளை கீழே இறக்கினர். காஞ்சிபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.