சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருஉருவச்சிலையை மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர்கருணாநிதிமறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, அவர் மறைந்த நாளான இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்புவிழா நடைபெற்றது.கலைஞர்அமர்ந்து எழுத்தோவியம் தீட்டுவதுபோன்று 6.2 அடி அகலம், 6.5 அடி உயரத்தில், 30 டன் எடையில்நிறுவப்பட்டவெண்கல சிலையை மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

Advertisment

இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின்,புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்துமற்றும் முக்கிய திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட வெண்கல சிலையின் பீடத்தில் வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்,அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சிஎனகலைஞரின் சிலை பீடத்தில் ஐந்து கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைதிறப்பு நிகழ்வை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நாராயணசாமி ஆகியோர்மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும்ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்விழாவிற்கு அழைக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் உரையாற்ற உள்ளனர்.

Advertisment