rs

Advertisment

வேலையில்லாத பட்டதாரிகள் செலுத்த வேண்டிய கல்விக் கடன்களை மிரட்டி வசூலிப்பதற்காக தனியார் கடன் வசூல் நிறுவனங்களிடம் பொதுத்துறை வங்கிகள் ஒப்படைத்ததைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிப்படி வேலையில்லாப் பட்டதாரிகள் செலுத்த வேண்டியக் கல்விக்கடன்களை பினாமி அரசே செலுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் நாளை (20.03.2018) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.