Mamata surprised playing kerala drum Satabhishek ceremony

மணிப்பூர் ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமானஇல. கணேசனின்சகோதரர் இல. கோபாலனின் சதாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா தமிழகம் வந்துள்ளார். இதற்காக நேற்று சென்னை வந்த மம்தா, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் சந்திப்பாகஇருக்கலாம் என பேசப்பட்டு வந்த நிலையில் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்கள்ஸ்டாலினும்,மம்தாவும், “இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.தேர்தல் சந்திப்பு அல்ல” என விளக்கமளித்தனர்.

Advertisment

இந்நிலையில், சென்னையில் இன்று நடக்கும் இல. கணேசனின்சகோதரரின் சதாபிஷேகத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள், நடிகர் ரஜினிகாந்த் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவிற்கு வருபவர்களைவரவேற்பதற்காக செண்டை மேளம் அடித்துவரவேற்கப்பட்டனர்.

Advertisment

அந்த வகையில் விழாவிற்குவருகை புரிந்த மம்தாவுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது செண்டை மேளம் அடிப்பதை உற்று நோக்கிய முதல்வர் மம்தா, செண்டை மேளம் அடிக்கும்குச்சியை வாங்கி செண்டை மேளத்தைஅடித்து பலரையும் வியக்கவைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.