Advertisment

தடையில்லா மின்சாரம் பெறத் தயாராகும் மாமல்லபுரம்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் அதிக வருவாய் தரக்கூடிய நகரம் மாமல்லபுரம் இங்கு மிதமான மழைக்கும், காற்றுக்கும் மின்சாரத்தை நிறுத்தி விடுவது வழக்கம். இது போன்ற மின் வெட்டால் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளிடையே திருட்டு பயம் அதிகரித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மர்ம நபர்கள் திருடிய சம்பவங்களும் நடந்தது.

Advertisment

​​Mamallapuram ready to get uninterrupted power supply !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சிலர் பாலியல் துன்புறுத்தலில் சிக்கியுள்ள உள்ளனர். இதை உள்நாட்டு, வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் பலர் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூகவலை தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடலோர பகுதி சுற்றுலா தளங்களை மேம்படுத்த பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது இதில் முதல் கட்டமாக மாமல்லபுத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட இங்குள்ள சாலை, வீதி, தெரு, என சுமார் 86கிலோ மீட்டர் தூரத்துக்கு தரைவழி மின்சார கேபில்கள் பதித்து மின்சார வயர் தெரியாமல் அழகான பசுமை நகரமாக மாற்றி தடையில்லா மின்சாரம் வழங்க உள்ளனர்.

அதற்கான முதல்கட்ட பணிகளை மின் வாரியம் துவங்கி விட்டது. இந்த பணிக்காக விழுப்புரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 200 மீட்டர் நீளம் கொன்ட 100 க்கும் மேற்பட்ட கேபில் உருளைகள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிய 6 மாதம் ஆகும் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். பணி முடிந்து தரைவழி மின்சாரம் வழங்கப்பட்டதும் மாமல்லபுரம் சென்னை பெருநகர் போன்று காட்சியளிக்கும் என்பது குறிப்பிடதக்கது. மாமல்லபுரம் புறவழிச் சாலையில் தரையில் பதிப்பதற்காக தயாராக வைக்கப்பட்டுள்ள மின்வயர் கேபிள் உருளைகளை படத்தில் காணலாம்.

Electric current kanjipuram wire
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe