Advertisment

'கிலோ மல்லி 2,400 ரூபாய் '-எகிறிய பூக்கள் மற்றும் காய்கறிகள் விலை

pongal

தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1-ஆம் தேதியில் சூரிய வழிபாடு, விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

போகியுடன் இன்று (13/01/2025)பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களை பொறுத்தவரை மல்லி மற்றும் முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கிலோ 2,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஜாதி மல்லி கிலோ 2000 ரூபாய்க்கும், ஐஸ் மல்லி கிலோ 1,900 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Advertisment

அதேபோல் காய்கறிகள் விலையை பொறுத்தவரை மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. காவல்துறையின் பாதுகாப்புடன் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதாலும் ஒட்டுமொத்தமாக காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ 150 ரூபாய், அவரைக்காய் கிலோ 100 ரூபாய், பீன்ஸ் கிலோ 120 ரூபாய், கத்திரிக்காய் கிலோ 50 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 50 ரூபாய், மிளகாய் கிலோ 40 ரூபாய், பீட்ரூட் கிலோ 30 ரூபாய், சேனைக்கிழங்கு கிலோ 80 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 50 ரூபாய் என விற்பனையாகிறது. தக்காளி கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

flowers vegetables
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe