Maligai Flower rate rose at erode

Advertisment

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விவசாயிகள், வியாபாரிகள் நேரில் கலந்து கொள்ளும் ஏல முறையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தப் பூக்கள் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக, கடந்த சில நாட்களாக மல்லிகைப் பூக்களின் வரத்துக் குறைந்தது. இதன் காரணமாகவும் 14ஆம் தேதி அமாவாசை என்பதாலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்தது.

மல்லிகைப் பூ கிலோ ரூ.2,047க்கு விற்பனையானது. சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் 14ஆம் தேதி விலை நிலவரப்படி, மல்லிகைப் பூ கிலோ 2,047 ரூபாய்க்கும், முல்லைபூ கிலோ 760 ரூபாய்க்கும், காக்கடா கிலோ 750 ரூபாய்க்கும், செண்டு கிலோ 75 ரூபாய்க்கும், ஜாதி முல்லை கிலோ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisment

பூக்களின் விலை உயர்வால் சத்தியமங்கலம் மலர் உற்பத்தி செய்யும் விவசாயக் குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு கிலோ பூ வாங்க முடியாது. 100 கிராம் பூ, இருநூறு ரூபாய். இந்த விலை உயர்வு,மல்லிகைப் பூவிவசாயிகளின் மனதைப் பூரிக்க வைத்துள்ளது.