Male peacock lost due to electrocution

Advertisment

ஈரோடு, சங்க நகர் 7வது வீதி, தென்றல் நகரில் இன்று காலை ஆண் மயில் ஒன்று பறந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியிலிருந்த மின்சார வயரில்மயிலின் தோகை எதிர்பாராத விதமாகப் பட்டது. இதனையடுத்து மின்சாரம் தாக்கிமயில் கீழே விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில்மயில் பரிதாபமாக இறந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஈரோடு வனத்துறையினருக்குத்தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துமயில் உடலை மீட்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு எடுத்துச் சென்றனர்.