Male corpse found in train

Advertisment

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள ஐந்தாவது நடைமேடையில் நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டியில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக தூய்மைப் பணியாளர்கள்உள்ளே நுழைந்தபோது ஒரு ஆண் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.