ADVERTISEMENT

மாலத்தீவிலிருந்து தூத்துக்குடிக்கு மீட்கப்பட்ட 198 தமிழர்களின் மாவட்ட வாரியான விபரம்...!

08:50 AM Jun 23, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

'ஆபரேசன் சமுத்திர சேது திட்டம்' மூலம் மாலத்தீவிலிருந்து 198 இந்தியர்களை அழைத்துக் கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் இன்று (23/06/2020) தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 195 நபர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்கள் உள்ளிட்ட 198 தமிழர்களின் மாவட்ட வாரியாக விபரங்களை வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த மக்கள் தத்தமது தாயகம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய கப்பற்படையின் ஆபரேசன் சமுத்திரா சேது திட்டத்தின் மூலம் மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றி தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஏறக்குறைய 3,107 இந்தியர்கள் ஐ.என்.எஸ்.ஜாஷ்வா, ஐ.என்.எஸ் மஹர், ஐ.என்.எஸ் ஷர்துல் மற்றும் ஐ.என்.எஸ் அய்ராவத் உள்ளிட்ட இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனின் ஒரு பகுதியாக தாயகம் திரும்ப இயலாமல் மாலத்தீவில் தவித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 195 நபர்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்கள் உள்ளிட்ட 198 தமிழர்களை மீட்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் விளைவாக 188 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் ஆண்குழந்தைகள் 3 உள்ளிட்ட 198 நபர்களை அழைத்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தூத்துக்குடிக்குப் புறப்பட்டது ஐ.என்.எஸ் அய்ராவத் கப்பல்.

இன்று (23/06/2020) காலை 06.40 மணியளவில் தூத்துக்குடி துறைமுகம் வந்த ஐ.என்.எஸ் அய்ராவத் 198 பயணிகளையும் பத்திரமாக தரையிறக்கியது. மாவட்டத்தின் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்டோர் ஒத்துழைப்போடு தரையிறங்கிய அனைவரும் தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மருத்துவப் பரிசோதனை முடித்த அனைவரின் முகவரிகளும் சரிப்பார்க்கப்பட்டு வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பயணம் செய்தவர்களில் புதுச்சேரி 3 தவிர்த்து, சிவகங்கை 7, தென்காசி 4, தேனி 6, திருவள்ளூர் 1, திருவண்ணாமலை 1, அரியலூர் 4, சென்னை 1, கடலூர் 5, தர்மபுரி 1, திண்டுக்கல் 3, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 3, கன்னியாகுமரி 64, கரூர் 1, கிருஷ்ணகிரி 1, மதுரை 5, நாகை 6, பெரம்பலூர் 15, புதுக்கோட்டை 11, ராமநாதபுரம் 10, சேலம் 4, திருவாரூர் 4, திருச்சி 10, திருநெல்வேலி 5, தூத்துக்குடி 5, வேலூர் 1, விழுப்புரம் 4, விருதுநகர் 3 உள்ளிட்ட மாவட்டங்களில் 195 நபர்களும், நபர்களும் என மாவட்ட வாரியாகப் பட்டியல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT